ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்துக்கும் வழங்கப்பட்ட இசட் ப்ளஸ் பாதுகாப்பை நீக்கக்கோரி ஹிமான்சு அகர்வால் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கான தீர்ப்பு கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கப்பட்டது.
அப்போது, உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோக்கில் ஆபத்து இருக்கும்பட்சத்தில் பாதுகாப்புக்கான செலவுகளை அவர்களே ஏற்றால் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவதில் எந்த தடையும் இல்லை என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதேபோல், முகேஷ் அம்பானியின் குடும்பமும் தங்கள் பாதுகாப்புக்கான செலவுகளை அவர்களே ஏற்பதால் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவதில் எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.