தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு! - சிதம்பரம் முன்ஜாமின் மனு உச்சநீதிமன்ற ஏற்க மறுப்பு

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் தனக்கு முன்ஜாமின் அளிக்குமாறு கேட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.

சிதம்பரம்

By

Published : Aug 21, 2019, 11:06 AM IST

Updated : Aug 21, 2019, 3:00 PM IST

ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்தை கைதுசெய்ய அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் அவரை தேடி வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் அளிக்குமாறு ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை அணுகினார். இதுகுறித்து இன்று விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா, அவரது மனுவை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.

Last Updated : Aug 21, 2019, 3:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details