தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.20 ஆயிரம் கோடி விரிவாக்கப் பணிகளுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்லி: மத்திய அரசின் ரூ.20 ஆயிரம் கோடி விரிவாக்கப் பணிகளுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Supreme Court  Central Vista Project  Justice Dinesh Meheshwari  AM Khanwilkar  CJI SA Bobde  UNESCO  Central govt  விஸ்தரிப்பு திட்டம்  உச்ச நீதிமன்றம்  ரூ.20 ஆயிரம் கோடி திட்டம்
Supreme Court Central Vista Project Justice Dinesh Meheshwari AM Khanwilkar CJI SA Bobde UNESCO Central govt விஸ்தரிப்பு திட்டம் உச்ச நீதிமன்றம் ரூ.20 ஆயிரம் கோடி திட்டம்

By

Published : Jun 19, 2020, 2:03 PM IST

மத்திய அரசின் ரூ.20 ஆயிரம் கோடி விரிவாக்கத் திட்டத்துக்கு எதிராக ராஜிவ் ரூடி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்செய்தார்.

அந்த மனுவில், விரிவாக்கத் திட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு காணொலி வாயிலாக விசாரணை நடத்தினார்கள்.

அப்போது நீதிபதிகள் இத்திட்டத்துக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர். மேலும், நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, பணிகளில் ஈடுபடும் மத்திய அரசையும் எச்சரித்தது.

முன்னதாக இந்த வழக்கில் மனுதாரர் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அறிவுறுத்தியிருந்தார்.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் இன்றைய விசாரணையின்போது, கோவிட்-19 நெருக்கடி, சுற்றுச்சூழல் உத்தரவுகள் நிலுவையில் இருப்பதையும் சுட்டிக்காட்டி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தலைவராகும் இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details