விலங்கு நல ஆர்வலர் சங்கீதா டோக்ரா என்பவர் உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகள் பராமரிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், ”நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாடு முழுவதுமுள்ள உயிரியல் பூங்காக்களில் அடைக்கப்பட்டிருக்கும் விலங்குகளுக்கு உணவுகள் முறையாக வழங்கப்படுவதில்லை. எனவே, இந்த பிரச்னையை கருத்தில் கொண்டு உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை பராமரிக்க அரசாங்கத்திற்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.கே.கவுல் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 காரணமாக மனிதர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளும் உள்ளன என்பதும் உண்மை தான்.