தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் - உச்ச நீதிமன்றம் - நீட் தேர்வு

டெல்லி: நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

supreme court
supreme court

By

Published : Sep 9, 2020, 4:06 PM IST

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. கரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை செப்டம்பர் 4ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வு ஒத்திவைக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இதே கோரிக்கையை முன்வைத்து நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வு பாதுகாப்பான முறையில் நடத்த அரசு அலுவலர்கள் அனைத்து விதமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் வரும் 13ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details