தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திஷா என்கவுண்டர் வழக்கு: போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு - தீக்ஷா என்கவுண்டர் வழக்கு

டெல்லி: திஷா என்கவுன்டர் வழக்கில் காவல் துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Supreme Court Hyderabad rape case Telangana rape case Telangana encounter case SC refuses plea in T'gana encounter case தீக்ஷா என்கவுண்டர் வழக்கு உச்ச நீதிமன்றம், காவல்துறை, தீக்ஷா என்கவுண்டர், இழப்பீடு, நீதிவிசாரணை
SC

By

Published : Feb 29, 2020, 8:12 AM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்தாண்டு நவம்பர் 27ஆம் தேதி, கால்நடை பெண் மருத்துவர் ஒருவர் நால்வரால் கொடூரமாகப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, எரித்துப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜொல்லு நவீன், ஜொல்லு சிவா, சிந்தாகுண்ட்ல சென்னகேசவுலு, முஹம்மது அஹமது ஆகியோர் கைதானார்கள். இவர்கள் நால்வரும் காவலர்கள் விசாரணையின்போது தப்பியோட முயன்றதாக டிசம்பரில் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது குறித்து நால்வரின் பெற்றோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், என்கவுன்டர் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, இது தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடந்துவரும் நிலையில், இழப்பீடு, நீதி விசாரணை நடத்த உத்தரவிட மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த நபர்!

ABOUT THE AUTHOR

...view details