குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடக்கும் மாநிலங்கள், தலைநகர் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இதுதொடர்பான உத்தரவு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடக்கும் போது அமலாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக வழக்குரைஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இதுதொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறினர்.
இதையடுத்து மனுதாரர் வழக்குரைஞர் எம்.எல். சர்மா தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் டெல்லி யூனியன் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பிரயோகிக்கும் அதிகாரத்தை காவலர்களுக்கு கூடுதலாக மூன்று மாதங்களுக்கு வழங்கியுள்ளார்.
இந்த சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை 12 மாதங்கள் வரை காவலில் வைக்கலாம். இதையும் மனுதாரர் எம்.எல். சர்மா குறிப்பிட்டிருந்தார்.