தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்கும் விதமாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் கடுமையான பிரிவுகளான குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை இன்றி கைது செய்தலுக்கு தடை விதித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்பிணை வழங்கும் திருத்தத்தை அறிமுகப்படுத்தியும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எஸ்.சி/எஸ்.டி சட்டம்; மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றம்!
டெல்லி: எஸ்.சி/எஸ்.டி சட்டம் குறித்த மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Sc
இந்த தீர்ப்பால் சட்டம் நீர்த்து போய்விடும் எனக்கூறி பல அரசியல் கட்சிகள் நாடு முழுவதும் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் போராட்டத்தில் இறங்கியது. பதற்றம் நிலவியதைத் தொடர்ந்து, தீர்ப்பை மறுசீராய்வு செய்ய மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.