தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளின் பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை! - Karnataka High Court

டெல்லி: கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளின் பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை
உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளின் பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை

By

Published : Apr 21, 2020, 11:57 AM IST

Updated : Apr 21, 2020, 1:08 PM IST

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் செயல்டும் கொலிஜியம் அமைப்பு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

அதன்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் சிவசங்கர் அனரன்னவர், எம். கணேஷயா உமா, வி. ஸ்ரீஷானந்தா, ஜே. சஞ்சீவ் குமார், பி. நேமச்சந்திர தேசாய் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்துக்காக நீதிபதிகள் பி. கிருஷ்ணா மோகன், கே. சுரேஷ் ரெட்டி, ஜே. லலிதா குமாரி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

தெலங்கானா உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி பி. விஜய்சென் ரெட்டி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். நீதிபதிகளை நியமிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு முடிவுகளை மத்திய அரசு அறிவிக்கும்.

இதையும் படிங்க: ராணுவத்தை களமிறக்குங்கள் : உச்ச நீதிமன்றத்தில் மனு

Last Updated : Apr 21, 2020, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details