கரோனா அச்சம் காரணமாக ஜூன் 23ஆம் தேதி நடைபெறவிருந்த பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ போப்டே அடங்கிய அமர்வு தடை விதித்துள்ளது.
’ஜெகன்நாதர் நம்மை மன்னிப்பார்’ - ரத யாத்திரைக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம் - ரத யாத்திரை ரத்து
13:03 June 18
டெல்லி: கரோனா சூழலில் மக்கள் நலன் கருதி பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
20 நாட்களாக நடைபெற்றுவந்த ரத யாத்திரைக்கான பணிகளையும் நிறுத்தும்படி உத்தரவிட்ட நீதிபதி, கடவுள் ஜெகன்நாதர் நம்மை மன்னிப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒடிசா விகாஷ் பரிசத் எனும் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், கரோனா பரவலின்போது விழாக்களை நடத்துவது வைரஸ் பரவலை அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அம்மாநிலத்தில் வரும் ஜூன் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த வழக்கறிஞர் ஒருவர், ஜெகன்நாதர் ரத யாத்திரையில் 10 லட்சம் நபர்களுக்கு மேல் பங்கேற்பார்கள் என்றார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உச்ச நீதிமன்ற அமர்வு, கரோனா சூழலில் 10 ஆயிரம் பேர் கூடுவதே மிகவும் ஆபத்தானது. இதனால் இந்த ரத யாத்திரையை நிச்சயமாக அனுமதிக்க முடியாது என தடை விதித்து உத்தரவிட்டது.