டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிவடைந்து 48 பேர் உயிரிழந்தனர். இதில், சிக்கி 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், கலவரம் குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே, நீதிபதிகள் பி. ஆர். கவாய், சூர்யா காந்த் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
டெல்லி உயர் நீதிமன்றம் கலவரம் குறித்த வழக்குகளை விரைந்து விசாரித்து அமைதியான தீர்வை எட்ட உதவ வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே கூறுகையில், "கலவரம் குறித்து வழக்குகள் நீண்ட நாள்களுக்கு மேல் ஒத்திவைத்திருப்பது நியாயமற்றது.