சிஏஏ சட்டத்தை எதிர்த்து போராடி வந்த ஜே.என்.யூ. மாணவர் சர்ஜில் இமாம், போராட்டத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக டெல்லி, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து விசாரிக்கும் படி உச்ச நீதிமன்றத்தில் சர்ஜில் இமாம் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், எம்.ஆர். ஷா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில், இந்த மனு மீது டெல்லி அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா டெல்லி அரசு சார்பாக ஆஜாராகி, ''இந்த மனு மீது பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும். அதேபோல் டெல்லி அரசு மட்டும் இந்த மனுவிற்கு பதிலளித்தால் போதாது. மற்ற மாநிலங்களும் பதிலளிக்க வேண்டும்'' எனக் கூறினார்.