காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் தயாரித்த 12 ஹெலிகாப்டர்களை குடியரசு தலைவர், பிரதமர் போன்ற வி.வி.ஐ.பிகளுக்கு வாங்க முடிவு செய்து, 2010ஆம் ஆண்டு 3600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் புரூனோ ஸ்பாக்நோலினி (BRUNO SPAGNOLINI), இந்த ஒப்பந்தத்தினை உறுதிசெய்ய லஞ்சம் கொடுத்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார்.
பின்னர் இந்த ஒப்பந்தத்தை இந்திய அரசு கைவிட்டது. ஆனால் இதில் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனிய காந்தி ஆகியோரின் பங்கு என்ன என்ற கேள்வி எழுந்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது.