உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகள் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றில் இடம்பெற்றிருந்த நிலையில், தமிழ் மொழி இல்லாமல் இருந்தது தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
முதன்முறையாக தமிழில் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பு! - தமிழில் வெளியானது
உச்ச நீதிமன்ற தீர்ப்பு முதன் முதலாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியிருப்பது தமிழ் ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதையடுத்து நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகலை வெளியிட்டார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற இணையதளத்தில் தமிழ் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளில் 113 வழக்குகளின் தீர்ப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட தீர்ப்பும் வெளியாகியது. முதன்முதலாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட தீர்ப்பே சரவண பவன் ராஜாகோபால் வழக்கு ஆகும்.