தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உன்னாவ் வழக்கு; உச்ச நீதிமன்றம் அதிரடி - உன்னாவ் வழக்கு

டெல்லி: உன்னாவ் பாலியல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உத்தரப் பிரதேசத்திலிருந்து டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது.

SC

By

Published : Aug 1, 2019, 3:11 PM IST

உன்னாவ் வழக்கு பல திருப்பங்களை சந்தித்துவந்த நிலையில், இது தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையும் உத்தரப் பிரதேச சிபிஐ நீதிமன்றத்திலிருந்து டெல்லி சிபிஐ நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்காலிகமாக இடைக்கால இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ரூ. 25 லட்சத்தை இடைக்கால இழப்பீடாக உத்தரப் பிரதேச அரசு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி, அவரின் வழக்கறிஞர், அவரின் தாய் உள்ளிட்ட உறவினர்களுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நியமிக்கப்படவுள்ள நீதிபதி வழக்கின் விசாரணையை 45 நாட்களுக்குள் முடித்துவைக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details