கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
நாட்டில் தொடர்ந்து வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசு கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர, அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. மேலும், இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் தேர்வினை நடத்தவும் உத்தரவிட்டது.
மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்தும், பல்கலைக் கழக மானியக்குழு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சிவசேனாவின் இளைஞரணித் தலைவர் ஆதித்யா தாக்கரே, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கல்லூரி இறுதியாண்டு மாணவர் உள்பட நாடு முழுவதும் இருந்து சுமார் 30 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.