தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் குறித்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு! - வழக்குரைஞர் ரீபன் கன்சால்

டெல்லி : ஊடக கருத்து சுதந்திரம் குறித்த தெளிவான வரையறையை அறிக்கையாக அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் குறித்த  வழக்கில் மத்திய அரசை பதிலளிக்கக் கோரி உத்தரவு!
அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் குறித்த வழக்கில் மத்திய அரசை பதிலளிக்கக் கோரி உத்தரவு!

By

Published : Aug 7, 2020, 6:57 PM IST

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஊடகங்களில் மதத் தலைவர், புனிதர்கள், மதம் மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு எதிராக செய்திகளை வெளியிட தடை விதிக்க வேண்டுமென வழக்குரைஞர் தீபக் கன்சால் என்பவர் பொது நல மனு கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், "ஊடகச் சுதந்திரம் என்ற பெயரில் மத துறவி, மதம் மற்றும் அரசியல் அமைப்புக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து பல தொலைக்காட்சிகள், இணைய ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இதுபோன்ற குற்றச்சாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கட்டுப்பாடற்ற ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இணைய காட்சி ஊடகங்களை தணிக்கைச் செய்ய மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

நீதி நிர்வாகத்தில் தலையிடுவது போன்ற ஊடக விவாதங்கள், அரசு திட்டங்கள் குறித்த விசாரணை, நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மீதான விவாத நிகழ்ச்சிகள், செயல்களை உடனடியாக தடை செய்திட வேண்டும்.

இந்தியாவில் ஒளிபரப்பு சேவைகளை மேம்படுத்துவதற்கும் வசதி செய்வதற்கும் நோக்கமாக இந்திய ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணையம் (BRAI) என்று அழைக்கப்படும் ஒரு தன்னாட்சி அதிகாரத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சரத் அரவிந்த் போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு முன்பாக இன்று (ஆகஸ்ட் 7) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், இது குறித்த மத்திய அரசின் பதிலை அறிக்கையாக நான்கு வாரங்களில் அளிக்கக் கோரி உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details