தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜூம் செயலிக்கு தடைவிதிக்கப்படுமா? - மத்திய அரசிற்கு நோட்டீஸ்

டெல்லி: ஜூம் செயலியை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் பதிலளிக்க மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

By

Published : May 22, 2020, 7:33 PM IST

ஜூம் செயலி மக்களின் தனி உரிமையை மீறுவதோடு, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் வாய்ப்புள்ளதாகவும் இதனால் உரிய சட்டம் இயற்றப்படும் வரை இந்த செயலியை தடை செய்ய வேண்டும் எனவும் ஹர்ஷ் சக் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஊரடங்கினால் ஜூம் செயலின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மக்கள் இந்த செயலியை தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறிப்பிட்டுள்ளார். சிறார்கள் இந்த செயலியைப் பயன்படுத்தி ஆபாசப் படங்களைப் பார்ப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், ஜூம் செயலியின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அபாயங்கள் குறித்து மத்திய அரசு முழுமையான தொழில்நுட்ப ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, ஜூம் செயலியை தடைசெய்வது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் 107 பயணிகளுடன் சென்ற விமானம் கீழே விழுந்து விபத்து

ABOUT THE AUTHOR

...view details