அஸ்ஸாம் மாநிலத்திற்கு இன்னர் லைன் பர்மிட் (Inner Line Permit) எனப்படும் உள்நுழைவு அனுமதி வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டுமெனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் அஸ்ஸாம் மாணவர் சங்கங்கள் இணைந்து மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளன.
அந்த மனுவில், "அரசியல் ரீதியான காரணங்களுக்காக மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட 1873 வங்காள கிழக்கு எல்லை ஒழுங்குமுறைத் (2019) திருத்தத்தை அஸ்ஸாம் மக்கள் எதிர்க்கிறோம்.
2019ஆம் ஆண்டின் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் அஸ்ஸாம் மண்ணின் உரிமையையும் கேலிக்குள்ளாக்கும்விதமாகவே உள்நுழைவு அனுமதி மீதான தடையை நாங்கள் கருதுகிறோம்.