மியான்மரிலிருந்து வங்கதேசம் வழியாக சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் குடியேறிய ரோஹிங்கியா அகதிகளை இந்தியாவைவிட்டு நாடு கடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு மார்ச் மாதத்துக்குள் பதலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை மார்ச் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில், மனுதாரர் தரப்பிலிருந்து ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், "சட்டப்பிரிவு 21 எந்தவொரு அகதியையும் நாடு கடத்த அனுமதிக்கவில்லை" என்றார்.
மேலும், "இந்தியாவுக்கு வரும் எந்த அகதிகளையும் திரும்ப அனுப்ப முடியாது. அவர்களை நீண்ட கால விசாக்களில் தங்க அனுமதிக்க வேண்டும்" என்றும் பூஷன் கூறினார்.