டெல்லி:1984ஆம் ஆண்டு சீக்கிய கலவர வழக்கில் குற்றவாளியும், முன்னாள் காங்கிரஸ் உறுப்பினருமான சஜ்ஜன் குமார் தாக்கல் செய்த பிணை (ஜாமின்) மனு தொடர்பாகஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில் அவருக்கு பிணை வழங்குவது தொடர்பாக கேள்வியெழுப்பி உள்ளது. சஜ்ஜன் குமார் இதற்கு முன்பு பலமுறை பிணை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனாலும், அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கவில்லை. அவர் தனது வயது மூப்பு மற்றும் சிறைக்குள் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயத்தின் அடிப்படையில் தற்போது பிணை கோரியுள்ளார்.