பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதிக்கப்பட்ட 187 கொத்தடிமை தொழிலாளர்களை மீட்கக் கோரிய மனு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் மனு மீதான விசாரணை ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.
கொத்தடிமை தொழிலாளர்களை விடுவிக்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்! - செங்கல் சூளைகள்
டெல்லி: செங்கல் சூளைகளிலிருந்து 187 கொத்தடிமை தொழிலாளர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் இருவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜாஹித் உசேன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், மே 11ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை மீறி செங்கல் சூளைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை மீட்க உத்தரப் பிரதேசம் சம்பல் மாவட்ட நீதிபதி, பிகார் ரோஹ்தாஸ் மாவட்ட நீதிபதி உடனடியாக செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
செங்கல் சூளைகளில் பணியாற்றிய தொழிலாளர்களை மீட்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அந்த இரு நீதிபதிகளும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. மேலும், ஜாஹித் உசேன் மனுவின் நகலை உத்தரப் பிரதேசம், பிகார் மாநில அரசுகளின் முன் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.