இது தொடர்பாக, தொழிலாளர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.பி. பட்டேல் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "பாம்பே உயர் நீதிமன்றத்தை மகாராஷ்டிரா உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றினால் அது மகாராஷ்டிரா மக்களின் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கும். மேலும் மகாராஷ்டிரா மக்கள், பெருமை, கண்ணியத்துடன் வாழ வழி செய்யும். இந்த உரிமையானது கலாசார மற்றும் பாரம்பரிய உரிமை பாதுகாக்கும் இந்திய சட்டத்தின் 19, 21, 29 விதிகளின் கீழ் வரும்.
தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களும் அந்தந்த மாநிலத்தின் பெயர்களை கொண்டு செயல்பட வேண்டும். 2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உயர் நீதிமன்றங்களின் பெயர் மாற்றம் செய்யும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கல்கத்தா - கொல்கத்தா உயர் நீதிமன்றம் என்றும் மெட்ராஸ் - சென்னை உயர் நீதிமன்றம் எனவும் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தனன" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வு விசாரித்தது. அப்போது பாம்பே உயர் நீதிமன்றம் பெயர் மாற்றம் செய்வது குறித்து பதிலளிக்க மத்திய அரசிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதையும் படிங்க:ஜூலையிலிருந்து வழக்குகளை நேரில் விசாரிக்க வழக்குரைஞர்கள் கோரிக்கை!