கோவிட்- 19 தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், நீதிமன்றங்களில் கோவிட்- 19 பரவலைத் தடுப்பது குறித்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள், வழக்குரைஞர் சங்கங்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கைதிகள் அதிகமுள்ள சிறைகளில் கோவிட்-19 வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால், அது பெரிய எண்ணிக்கையில் சிறைக்கைதிகளைப் பாதிக்கும் என்றும் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவும் எனவும் தெரிவித்திருந்தார்.
துணை அட்டர்னி ஜெனரல் துஷார் மேத்தா, திகார் போன்ற கைதிகள் அதிகம் உள்ள சிறைச்சாலைகளில் கோவிட்-19 பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கைதிகள் யாருக்கேனும் கோவிட்-19 தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கோவிட்-19 சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.