சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன், ஊரடங்கையொட்டி டிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராமாயணத்தை விமர்சித்து மார்ச் 28ஆம் தேதியன்று ட்விட்டரில் கருத்து ஒன்றை பகிர்ந்தார்.
அந்தப் பதிவில், “கட்டாய ஊரடங்கு உத்தரவினால் கோடிக்கணக்கான மக்கள் பட்டினி கிடந்து, நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து செல்லும்போது, எங்கள் இதயமற்ற அமைச்சர்கள் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ராஜ்கோட்டைச் சேர்ந்த ஜெய்தேவ் பாய் ஜோஷி பிரசாந்த் பூஷன் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை பிரசாந்த் பூஷன் இழிவுபடுத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.