ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ப. சிதம்பரத்திற்கு ஜாமின் - ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு
10:37 October 22
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப. சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றமும் சிபிஐயும் சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
1 லட்சம் ரூபாய் பிணைத்தொகை செலுத்துமாறும் ப. சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், அந்த வழக்கில் இருந்தும் விடுவிப்பதற்கு சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கோரவுள்ளது.
அவரது உடல் நிலை, வயது உள்ளிட்டவையை கருத்தில்கொண்டு இந்த பிணை வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
தற்போது அமலாக்கத்துறை விசாரணையின் கீழ் இருந்துவருவதால் அக்டோபர் 24ஆம் தேதி வரை ப. சிதம்பரம் விடுவிக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 50 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்துவந்த நிலையில், ப. சிதம்பரத்திற்கு தற்போது ஜாமின் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.