ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், தமிழ்நாடு அரசு பரிந்துரையை ஏற்று தன்னை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்க வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ், நீதிபதி அஜய் ரஸ்தோகி, நீதிபதி ஹேமந்த் குப்தா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
பேரறிவாளனுக்கு கூடுதலாக ஒரு வாரம் பிணை... வழக்கு விசாரணை ஜனவரி மாதம் ஒத்திவைப்பு - பேரறிவாளன் பிணை
11:41 November 23
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளனின் பிணையை ஒரு வார காலம் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட இரண்டு வார கால பிணை நீட்டிப்பை, மேலும் ஒரு வாரம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும், பேரறிவாளனின் மருத்துவ பரிசோதனை தொடர்பான செயல்பாடுகளுக்கு மாநில அரசு பாதுகாப்பு மற்றும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
அதே நேரம், பேரறிவாளனை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜனவரி மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டப்பிரிவு 432இன் கீழ் மாநில / மத்திய அரசுகள் இவரது கருணை மனு மீது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என முன்னதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது நினைவுக் கூரத்தக்கது.