கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு 14 நாள்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமில்லை என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து அருஷி ஜெயின் என்ற தனியார் மருத்துவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
மேலும் அந்த வழக்கில், கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னணி சுகாதார ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை அல்லது அவர்களின் ஊதியங்கள் குறைக்கப்படுகின்றன. மேலும் வழங்கப்படும் ஊதியங்கள் தாமதப்படுத்தப்படுகின்றன என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
முன்னதாக இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நடத்தியது. அதில், வட டெல்லி மாநகராட்சி மருத்துவர்களுக்குச் சம்பளம் வழங்கத் தொடங்கியுள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது குறித்து பல ஊடக அறிக்கைகளை உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ளது.
மனுதாரர் சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன், ஊதியம் வழங்கப்படாத ஆஷா தொழிலாளர்கள் பிரச்னையை எழுப்பினார். இந்த விவகாரம் மனுவின் எல்லைக்குள் வராது என்று கூறிய நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.