இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலர்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு கட்டணமின்றி அழைத்துச் செல்ல உத்தரவேண்டும் என ஜெக்தீப் எஸ் சொக்கர் சார்பாக உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், பிஆர் பவய் ஆகியோர் முன்பு விசாரனைக்கு வந்தது. அதில் ஜெக்தீப் எஸ் சொக்கர் சார்பாக வாதாடிய பிரசாந்த் பூஷன், ''புலம்பெயர் தொழிலாளர்களில் 64 சதவிகிதம் பேர் தங்களது கைகளில் ரூ.100க்கும் குறைந்தே பணம் வைத்துள்ளனர். அவர்களிடம் சொந்த மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல ரூ.700 முதல் ரூ.800 வரை கட்டணம் கேட்கப்பட்டுள்ளது. இதில் 85 சதவிகித கட்டணத்திற்கு அரசு மானியம் அளித்தாலும், மீதமுள்ள 15 சதவிகித கட்டணத்தையும் கொடுக்க முடியாத நிலையில் தான் தொழிலாளர்கள் உள்ளனர்.
அதேபோல் தொழிலாளர்களிடம் மருத்துவ சான்றிதழ்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் அவர்கள் எங்கு சென்று மருத்துவ சான்றிதழ் பெறுவார்கள்? எனவே அவர்களை கட்டணமின்றி சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்றார்.