விகாஸ் துபே என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கை விசாரணை செய்யும் நோக்கில் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்களுடன் சவுகான் தொடர்பில் இருக்கும் காரணத்தால் குழுவிலிருந்து அவரை நீக்க வேண்டும் எனக் கோரி கன்ஷ்யம் உபாத்யாய் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, உபாத்யாயின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பாப்டே கூறுகையில், "அரசியல் பிரமுகர்களுடன் நெருக்கமாக உள்ள நீதிபதிகள் அனைவரையும் ஒரு சார்பு உடையவர்கள் எனக் கூற முடியுமா?" என்றார்.