மக்கள்நலப் பணியாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனுவில், ”2006-2011ஆம் ஆண்டு காலகட்டத்தில் திமுக ஆட்சியில் 13 ஆயிரத்து 500 மக்கள்நலப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால் 2011ஆம் ஆண்டு அதிமுக அரசு ஆட்சிக் காலத்தில் அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் பணிநீக்கத்திற்கு எதிராக ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனை விசாரித்து உயர் நீதிமன்றம், மாற்றுத் துறைகளில் அவர்களைப் பணியமர்த்துமாறு தமிழ்நாடு அரசுக்கு 2014ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால் இதுநாள்வரை அந்த உத்தரவை தமிழ்நாடு அரசு பின்பற்றவில்லை. மேலும் இந்தக் கரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரமின்றி தவித்துவருகிறோம். ஆகையால் உடனடியாக மக்கள்நலப் பணியாளர்களை மாற்றுத் துறைகளில் பணியமர்த்த உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராகத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் தாக்கல்செய்த மனு மீதான விசாரணையை வரும் செப்டம்பர் மாதத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதையும் படிங்க:'டாஸ்மாக் பாதுகாப்பிற்காக காவலர்களா?': தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு