டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019 மக்களவை தேர்தலில், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்த வெற்றிக்கு எதிராக சரிதா நாயர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை (நவ.2) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, அற்பமான காரணத்துக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.