தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிர்பயா குற்றவாளி மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! - Supreme Court dismisses convict Pawan Gupta's petition

டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவர் தாக்கல் செய்த கருணை மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா குற்றவாளி மனு தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!
நிர்பயா குற்றவாளி மனு தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

By

Published : Jan 31, 2020, 5:07 PM IST

2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் நான்கு பேருக்கும் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தண்டனையை நிறைவேற்றிவிட வேண்டும் என டெல்லி அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. குற்றவாளிகள் தரப்பிலிருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஆகிய அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.

இதில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா கருணை மனு ஒன்றினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், சம்பவம் நடந்தபோது நான் சிறாராக இருந்ததால் கருணை மனுவை ஏற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், பவன் குப்தா கருணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. முன்னதாக முகேஷ் சிங் அனுப்பிய கருணை மனுவையும் குடியரசு தலைவர் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...நிர்பயா குற்றவாளிகளை நாளை தூக்கிலிட தடை கோரிய வழக்கு - ஒரு மணி நேரத்தில் தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details