தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு: குற்றவாளிகளின் கடைசி நிவாரண மனுக்கள் தள்ளுபடி - நிவாரண மனுக்கள்

டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகள் இருவர் தாக்கல் செய்திருந்த கடைசி நிவாரண மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Court
Court

By

Published : Jan 14, 2020, 2:57 PM IST

Updated : Jan 14, 2020, 3:55 PM IST

டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16ஆம் தேதி 23 வயது பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். இந்தக் குற்ற வழக்கில் ஒருவர் பதின்ம வயதுடையவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிச் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மீதமுள்ள ஐந்து பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நால்வருக்கும் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனைக்கு எதிராகத் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு தண்டனையை உறுதி செய்தது.

தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் 2017ஆம் ஆண்டு உச்சப்பட்ச தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து குற்றவாளிகள் நான்கு பேரும், குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பினர். இந்த மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து அந்த நான்கு பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டது. அதன்படி நால்வரும் வருகிற 22ஆம் தேதி திகார் சிறையில் தூக்கில் போடப்படவுள்ளனர்.

இதனையடுத்து, குற்றவாளிகளில் இருவரான வினய் குமார் சர்மாவும், முகேஷூம் உச்ச நீதிமன்றத்தில், கடைசி நிவாரண மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, அருண் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன், ஆர். பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வு இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மரண தண்டனை குற்றவாளிகளின் இறுதி சட்ட ஆயுதமான கடைசி நிவாரண மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Jan 14, 2020, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details