தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நித்தியானந்தா ஆஜராவதை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நித்தியானந்தா ஆஜராவதை உறுதிப்படுத்தும்படி கீழமை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்தியானந்தா ஆஜராவதை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!
நித்தியானந்தா ஆஜராவதை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

By

Published : Mar 4, 2020, 5:09 PM IST

2010 ஏப்ரல் 22ஆம் தேதி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நித்தியானந்தா, அதே ஆண்டு ஜூன் 11ஆம் தேதி பிணையில் வந்தார். இந்நிலையில் நித்தியானந்தாவின் முன்னாள் டிரைவரான கே. லெனின் எனும் நித்ய தர்மானந்தா, உச்ச நீதின்மறத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் தன் மீது போடப்பட்டுள்ள பிணையில் வெளிவர முடியாத வழக்கை ரத்து செய்யக் கோரியும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், ராமாநகர் கீழமை நீதிமன்றத்தில் லெனின் நேரில் ஆஜரானதால் அவர் மீது போடப்பட்டுள்ள பிணையில் வெளிவர முடியாத வழக்கை ரத்து செய்தது.

நித்தியானந்தா வழக்கில் சாட்சியாக ஆஜராகாததால், கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் லெனினுக்கு பிணையில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் உச்ச நீதிமன்றம், 2010ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நித்தியானந்தா ஆஜராவதை உறுதிப்படுத்தும்படி கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றம் நித்தியானந்தாவின் பிணை உத்தரவை ரத்து செய்து கடந்த மாதம் உத்தரவிட்டது. தலைமறைவான நித்தியானந்தா ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாக அம்மாநில் போலீசார் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details