தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கு வலியுறுத்தல்...! - உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அடையாள அட்டை ஏதும் இல்லாமல் பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கு வலியுறுத்தல்...!
பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கு வலியுறுத்தல்...!

By

Published : Sep 29, 2020, 7:19 PM IST

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கக் கோரி, தர்பார் மகிளா சமன்வயா குழு மனு ஒன்றினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் இன்று (செப். 29) விசாரணைக்கு வந்தது.

அப்போது, “தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, மாவட்ட சட்ட அலுவலர்களால் அடையாளம் காணப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை ஏதும் இல்லாமல் ரேஷன் பொருள்கள் அனைத்தும் கொடுக்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், பாலியல் தொழிலாளர்களுக்காக அரசு என்ன செய்துள்ளது, ரேஷன் பொருள்கள் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு மாநிலங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதையும் படிங்க...அவதூறு பரப்பிய விவகாரம்: பிரபல பல் மருத்துவரை ஆஜராக உத்தரவிட்ட நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details