தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்' - மத்திய, மாநில அரசுகள்

டெல்லி: கரோனா பரவலுக்கு மத்தியில் தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Supreme court
Supreme court

By

Published : Aug 4, 2020, 7:09 PM IST

கரோனாவின் தாக்கம் இந்தியாவில் தீவிரமடைந்துவருகிது. தினம்தோறும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இத்தொற்றால் பாதிக்கப்படும் முதியவர்கள் உயிரிழப்பை சந்திக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு எளிதில் தொற்று பரவும் சாத்தியக்கூறுகளும் இருப்பதால் 60 வயதுக்கு மேற்பட்டோர் வெளியில் நடமாட வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

இச்சூழலில், கரோனா காலத்தில் முதியவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு, அவர்களுக்கு சரியான நேரத்தில் முதியோர் ஓய்வூதியம் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். நாடு முழுவதும் ஒரு கோடி முதியவர்கள் தனியாக வசிப்பதால் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் உத்தரவிடக் கோரியிருந்தார்.

இம்மனு நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.எஸ். ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள் உள்பட அனைத்து முதியோர்களுக்கும் ஓய்வூதியத்துடன் சானிடைசர், முகக் கவசங்கள், தேவையான மருந்து மாத்திரைகள், பிபிஇ கிட் என அனைத்தையும் உரிய நேரத்தில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், தனியாக வசிக்கும் முதியோர்களின் பாதுகாப்பை கட்டாயம் மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அவர்களுக்கு எந்த நேரத்தில் என்ன உதவி கேட்டாலும் உடனே ஏற்படுத்திக் கொடுக்கவும் அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க:ஆதரவற்ற முதியோருக்கு அன்புச் சேவைபுரியும் பாக்யரதி ராாமமூர்த்தி!

ABOUT THE AUTHOR

...view details