தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீதிமன்ற நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர உச்ச நீதிமன்றம் ஆலோசனை - ஆன்லைன் நீதிமன்ற நடவடிக்கைகள்

டெல்லி: கரோனா பரவல் காரணமாக நீதிமன்றங்கள் இணைய வழியில் இயங்கிவரும் நிலையில், மீண்டும் இயல்பு நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசித்துவருகிறார்.

SC
SC

By

Published : Aug 12, 2020, 5:21 PM IST

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழலில், நீதிமன்ற நடவடிக்கைகளை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் முயற்சியில் உச்ச நீதிமன்றம் களமிறங்கியுள்ளது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பான SCAORA உறுப்பிர்களுடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்பு குறித்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த வாரம் முதல் சோதனை முயற்சியாக 2-3 நீதிமன்றங்களை மீண்டும் இயல்பு நிலையில் இயக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் தொடங்கவுள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக, SCAORA தலைவர் சிவாஜி ஜாதவ், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே உள்ளிட்டோர் நேரடி நீதிமன்ற நடவடிக்கைகளை தொடங்க உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்திவந்தனர். இந்தக் கோரிக்கையை அடுத்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பெங்களூரு கலவரம் : கோயிலை பாதுகாக்க மனித சங்கிலி அமைத்த இஸ்லாமியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details