டெல்லி: அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் மூன்று நீதிபதிகளை நிரந்தரமாக பணி நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் குழு பரிந்துரைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான கொலிஜியம் குழு பரிந்துரைத்தன் பேரில் நீதிபதி மணீஷ் சௌத்ரி, கௌகாத்தி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
இதுமட்டுமின்றி நிதிபதிகள் சஞ்சய் குமார் மேதி, நானி தாகியாஸ் ஆகியோரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சஞ்சய் குமார் கௌகாத்தியிலுள்ள டான் போஸ்கோ பள்ளியில் தொடக்கப் பள்ளியை படித்தவர். அதன்பிறகு, டெல்லி சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்த இவர், 2018ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி முதல் கௌகாத்தி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக உள்ளார்.