பிஎஸ் 4 ரக வாகனங்களை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் விற்பனை செய்யக்கூடாது என 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே கரோனா வைரஸ் காலத்தில் ஏற்பட்ட விற்பனை சரிவை சரி செய்வதற்காக பிஎஸ் 4 ரக வாகங்களை விற்பனையில் உச்ச நீதிமன்றம் மாற்றம் செய்ய வேண்டும் என ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் சார்பாக மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து பிஎஸ் 4 ரக வாகனங்களை டெல்லி - என்சிஆர் பகுதியைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் 30 நாள்கள் விற்றுக்கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து நடந்த விசாரணையில், மார்ச் 27ஆம் தேதிக்கு பின்னர் விற்பனை செய்யப்பட்ட பிஎஸ் 4 ரக வாகனங்களின் விற்பனை விவரங்களை ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கமும், பதிவு செய்யப்பட்ட பிஎஸ் 4 ரக வாகனங்களின் விவரங்களை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகமும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.