ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் தெலுங்கு வழிக் கல்வியிலிருந்து ஆங்கில வழிக் கல்வியாக மாற்றுவதற்கு அம்மாநில அரசு ஒப்புதல் தெரிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, ஸ்ரீநிவாஸ் குந்திபல்லி என்பவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம், ஆந்திர உயர் நீதிமன்றம் அம்மாநில அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசு மனு தாக்கல் செய்தது.
டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, கே.எம். ஜோசப் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, ஆந்திராவில் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து ஸ்ரீநிவாஸ் குந்திபல்லி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.