இந்திய ராணுவத்தில் ஆண்களைப்போல அல்லாமல் பெண்களுக்கு மிகக் குறைந்த காலமே பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் பணி உயர்வு, ஓய்வுக்குப் பிந்தைய பலன்கள் உள்ளிட்டவற்றைப் பெறுவதில் சிக்கல்கள் எழுகின்றன.
இது குறித்த விஷயங்களை நிர்வகிக்க கடற்படையில் பெண்களுக்காகத் தனி ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று சில பெண் உயர் அலுவலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி, டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "நாட்டுக்காகச் சேவைபுரியும் பெண்களுக்கு என நிரந்தர ஆணையம் அமைக்க அனுமதி மறுக்கப்படுவது கவலையளிக்கிறது.
ராணுவத்தில் பெண்கள் நுழைய இருந்த சட்டரீதியிலான தடைகள் நீக்கப்பட்ட பின்னரும், பெண்களுக்கென நிரந்தர ஆணையம் அமைப்பதில் பாகுபாடு காட்டக்கூடாது. ராணுவத்தில் ஆண்களைப் போலவே பெண்களையும் சமமாக மதிக்க வேண்டும்.