தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொழிலாளர்களுக்கு விரைவில் ஊதியம் வழங்கவேண்டும் - உச்ச நீதிமன்றம் - SC asks Centre to deal

டெல்லி: பொது முடக்கம் காரணமாக பல தொழிலாளிகள் தவித்து வருவதால் அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை விரைவில் வழங்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Breaking News

By

Published : May 27, 2020, 1:41 AM IST

Updated : May 27, 2020, 7:45 AM IST

தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போதுமான உதவிகளைச் செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வந்தாலும், அவை போதுமானதாக இல்லை எனவும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

ஊதியம் வழங்குவது தொடர்பான பிரச்னைகளை அவசரமாகக் கையாள வேண்டும் எனவும் அவர்களுக்கு முழு ஊதியம் வழங்கவேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் வாழ்வாதாரம் அவர்கள் வாங்கும் ஊதியத்தை நம்பி இருப்பதால் விரைவில் அவர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இதையும் படிங்க: முகக் கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கிய இபிஎஸ்! துண்டை எடுத்து கட்டிக்கோங்க!!!

Last Updated : May 27, 2020, 7:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details