குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. கடந்த இரு மாதங்களாக டெல்லி ஷாஹின் பாக்கில் போராடி வரும் மக்கள் நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர். இந்நிலையில், அவர்களைச் சந்தித்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட உச்ச நீதிமன்றம் இரு நபர் மத்தியஸ்தர் குழுவை அமைத்தது.
மத்தியஸ்தர் குழுவில் இடம்பெற்றுள்ள வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹேக்டே, சாதனா ராமசந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சாலையை மறிக்காமல் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் அல்லது போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.