அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சிதம்பரத்தின் மகனும் மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தைப் பல்வேறு குற்ற வழக்குகளில் விசாரணை செய்துவருகின்றன.
இந்நிலையில், இங்கிலாந்து, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளுக்கு செல்வதற்கு அனுமதிகோரி கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால், நிபந்தனைத் தொகையாக 10 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி, விமான விவரங்கள், பயண தேதி ஆகியவற்றை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.