தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கார்த்தி சிதம்பரம் ரூ.10 கோடி கட்டிவிட்டு லண்டன் செல்லலாம்' - உச்ச நீதிமன்றம் - கார்த்தி சிதம்பரம்

டெல்லி : ஐ.என்.எக்ஸ் மீடியா உள்ளிட்ட முறைகேட்டு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், உச்ச நீதிமன்றத்தில் ரூ.10 கோடி செலுத்தி லண்டன் செல்ல அனுமதி பெற்றுள்ளார்.

Supreme Court
Supreme Court

By

Published : Feb 14, 2020, 2:24 PM IST

Updated : Feb 14, 2020, 5:02 PM IST

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா, ஏர்டெல்-மேக்சிஸ் முறைகேட்டு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இதனால் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், லண்டனில் நடைபெறும் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்வதற்காக வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றத்திடம் கார்த்தி மனு அளித்திருந்தார்.

அவரின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வைப்புத் தொகையாக ரூ.10 கோடி செலுத்திவிட்டு வெளிநாடு செல்லலாம் என அனுமதி வழங்கியுள்ளது.

இதையும் படிங்க :பொருளாதார வீழ்ச்சிக்கு சிதம்பரம் சொல்லும் மூன்று காரணங்கள்

Last Updated : Feb 14, 2020, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details