தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எஸ்பிஐ வங்கியில் வீட்டிலிருந்தபடியே உடனடி சேமிப்புக் கணக்கு; ஆதார் அவசியம்!

பான் அட்டை, ஆதார் அட்டை ஆகியவை கொண்டு எஸ்பிஐ வங்கியில் யோனோ செயலி மூலம் உடனடி சேமிப்பு கணக்கைத் தொடங்க முடியும் என பாரத ஸ்டேட் வங்கி தலைமைத் தெரிவித்துள்ளது.

sbi online savings account
sbi online savings account

By

Published : Jun 12, 2020, 7:11 PM IST

மும்பை: ஆதார் அட்டை கொண்டு எஸ்பிஐ வங்கியின் யோனோ செயலி மூலம் சேமிப்பு கணக்குகளை தொடங்கமுடியும் என வங்கி தலைமை அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும் பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ-யின் டிஜிட்டல் தளம் தான் யோனோ பாங்கிங். பான் அட்டை, ஆதார் அட்டை ஆகியவை கொண்டு எஸ்பிஐ வங்கியில் யோனோ செயலி மூலம் உடனடி சேமிப்பு கணக்கைத் தொடங்க முடியும்.

100% நேரடி அந்நிய முதலீடு : நிலக்கரி சுரங்கங்களை ஏலம்விடும் மத்திய அரசு!

வங்கியில் வந்து தொடங்கும் கணக்கிற்கு இணையான அனைத்து வசதிகளும் இந்த உடனடி சேமிப்புக் கணக்கிற்கு கொடுக்கப்படும் என்று எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ரூபே பற்று அட்டையும் (RuPay ATM Card) இந்த பயனர்களுக்கு வங்கிக் கிளைகளின் மூலம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலதிக விவரங்களை கணக்கில் சேர்க்க விரும்பும் பயனர்கள், அருகில் உள்ள வங்கிக் கிளைக்குச் சென்று தங்களின் விவரங்களை பதிவுசெய்து கொள்ளலாம் என வங்கி தலைமைத் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details