பொதுப்பிரிவில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தியது. இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பலை எழுந்தது. இந்நிலையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நடத்திய பணியாளர் தேர்வில் 10 சதவீத இட ஒதுக்கீடு பயனாளிகளுக்கு 28.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும், மற்றவர்களுக்கு 50 , 60 என கட்-ஆப் மதிப்பெண்ணும் வைக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து புதுச்சேரி தந்தை பெரியார் திக அமைப்பினர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவையும், மத்திய அரசையும் கண்டித்து புதுச்சேரியில் உள்ள எஸ்பிஐ பிரதான கிளையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.