இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "யாரும் பதற்றப்பட வேண்டாம். முன்னெச்சரிக்கையாக இருப்பதே தற்போதைய தேவையாகும்.
வரும் நாட்களில் மத்திய அமைச்சர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள மாட்டார்கள். நாட்டு மக்கள் தேவையில்லாமல் வெளியூர்களுக்குப் பயணம் செய்ய வேண்டாம். கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுத்து நிறுத்தலாம். பொது வெளியில் அதிகம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 என்ற தொற்று நோய் இந்தியா, இத்தாலி, ஈரான், தென் கொரியா உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி வருகிறது.
இந்தியாவில் இதுவரை 74 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 57 பேர் இந்தியர்கள் ஆவர். 17 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். மேலும், இதுவரை மூன்று பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் இணையத்தில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : கொரோனா தாக்கம்: ஒரு வாழைப்பழத்திற்காக சாலையில் சண்டையிட்ட 100க்கும் மேற்பட்ட குரங்குகள்!