தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மீனவர்கள் வலையில் சிக்கிய செயற்கைக்கோள் டேங்கர்... கொடுக்க மறுக்கும் அதிமுக எம்எல்ஏ!

புதுச்சேரி: மீனவர்கள் வலையில் சிக்கிக் கொண்டுவரப்பட்ட செயற்கைக்கோளின் எரிபொருள் டேங்கரில் வெடிக்கும் தன்மை கொண்ட பொருள் காணாமல் போயிருக்கிறது.

puducherry
puducherry

By

Published : Dec 3, 2019, 3:27 PM IST

புதுச்சேரி வம்பகீரபாலயம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மிக கனமான பொருள் ஒன்று வலையில் சிக்கியதைத் தொடர்ந்து, அதனை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், செயற்கைக் கோளை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் மோட்டார் தான் இது என்பது தெரியவந்தது. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி என எரிபொருள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ குழு இன்று புதுச்சேரிக்கு வந்து, அந்த பொருளை ஆய்வு செய்தனர்.

மீனவர்கள் வலையில் சிக்கிய செயற்கைக்கோள் டேங்கர்

அப்போது, ஒரு அடி நீளமுள்ள பகுதியைக் காணவில்லை என இஸ்ரோ குழுவினர் கூறியதையடுத்து, மீனவர்கள் அதனை எடுத்திருந்தால் உடனே அளிக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் அது வெடிக்கும் தன்மை கொண்டது எனவும் எச்சரித்தனர்.

இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த எம்எல்ஏ அன்பழகன் மற்றும் மீனவர்கள், எரிபொருள் டேங்கரை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மீனவர்களுக்கு இழப்பீடு தொகை கொடுக்காமல் ராக்கெட் எரிபொருள் டேங்கரை எடுத்துச் செல்லக்கூடாது எனவும் அதிகாரிகளிடம் அவர்கள் வாதிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: அரசு ஊழியர்கள் போராட்டத்தில் போலீஸ் அத்துமீறல்: அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details